கரூர்: வாய்க்காலில் குளித்தவர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை

63பார்த்தது
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மணத்தட்டை அருகே தேவதானம் பகுதியில் தென்கரை வாய்க்காலில் இருந்து பிரிந்து பாசன இரட்டை வாய்க்கால் பாலம் வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மது போதையில் தென்கரை வாய்க்கால் பாலம் அருகே குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திடீரென தண்ணீர் செல்லும் குழாயில் சிக்கி மூச்சு திணறி உயிரிழந்தார். அவருடன் குளித்த மற்றொரு நபர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

சம்பவம் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் குழாய் வழியாக செல்லும் தண்ணீரை நிறுத்தி சடலத்தை மீட்டு குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி