குளித்தலையில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு விழா நிகழ்ச்சி

51பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் 2022- 2023 இன் கீழ் ரூபாய் 912 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டப்பணிக்கு துவக்க விழா நிகழ்ச்சி மற்றும் பெரியார் நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021- 2022 இன் கீழ் ரூபாய் 150 லட்சம் மதிப்பீட்டில் பெரியார் நகர் பரிசல் துறை சாலை பகுதியில் நவீன எரிவாயு தகனம் மேடை அமைத்தல் திட்டத்தில் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு செய்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்வில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் நந்தகுமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேன்மொழி, திமுக மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி