கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சொட்டல் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்.
இவர் நேற்று இரவு பைக்கில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலையில் இருந்து பெட்டவாய்த்தலை நோக்கி வந்துள்ளார்.
குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி தனியார் பள்ளி அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே கதிரேசன் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்