பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் பயனாளிகளை கணக்கீடு செய்யும் அதிகாரிகள்

1187பார்த்தது
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் பயனாளிகளை கணக்கீடு செய்யும் அதிகாரிகள்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 2017ம் ஆண்டு முதல் புதியவீடுகள் ஒதுக்கீடு செய்து, அதில் வீடுகள் கட்டமுடியாத பயனாளிகள் இருந்து வருகின்றனர். இதனை அடுத்து தமிழக அரசின் வழி காட்டுதலின்படி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவை அடுத்து, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற பயனாளிகள், இதுவரை வீடுகள் கட்டமுடியாத நிலையில் உள்ளவர்களை கணக்கீடு செய்து வருகின்றனர்.
இதில் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி ராஜலிங்கம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதில் வீடுகட்டமுடியாத பயனாளிகளை கண்டறிந்து பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு மேஸ்திரிகளை வழங்குவது, மூலப்பொருட்களை ஏற்படுத்தி தருவது, அதற்கான நிதிகளை விரைந்து வழங்குவது என்று பயனாளிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

டேக்ஸ் :