கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டம் காவல்காரண்பட்டி துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலணி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், தளிஞ்சி, புத்துர், சின்னபுத்தூர், வேங்கடத்தான்பட்டி, குப்பனார்பட்டி, தனிக்கொடிபட்டி, ஆர். டி. மலை, புழுதேரி, வடசேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், நெய்தலூர் காலனி மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று 09 ஆம் தேதி (திங்கள் கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அன்றைய தினம் காலை 09. 00 மணி முதல் மாலை 05. 00 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் வழங்கப்படமாட்டாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.