ஹாஸ்பெட்டஸ் கொட்டகை அகற்றி சென்ற மர்ம நபர்கள்

74பார்த்தது
ஹாஸ்பெட்டஸ் கொட்டகை அகற்றி சென்ற மர்ம நபர்கள்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா கானியாளப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (48) இவருக்கு சொந்தமான அய்யர்மலை கிரிவலம் சாலையில் சண்முகா நகரில் இரண்டு வீட்டு மனைகள் உள்ளது. அதில் ஹாஸ்பெட்டஸ் வீடு அமைத்து அனுபவித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் செல்போனிலிருந்து மர்மநபர்கள் ஆஸ்பெட்டாஸ் வீட்டை அகற்றி விடுமாறு மிரட்டி உள்ளனர். அதனையடுத்து அவ்விடத்திற்கு சென்று பார்த்த போது ஆஸ்பட்டஸ் வீட்டை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி