கோவில் திருவிழா முன்னிட்டு முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்ச்சி

6309பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை இராஜேந்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகிரிஅம்மன், மலையாள சுவாமி, மதுரைவீரன் ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் ஊர் முக்கியஸ்தார்கள், கோவில் நிர்வாகிகள் சார்பில் திருவிழா நடத்த முடிவுசெய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வரும் 24 ஆம் தேதி புதன்கிழமை திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக இன்று முகூர்த்தகால் ஊன்ற சிறப்பு பூஜைகள் செய்து அபிஷேகம் செய்தனர். பிறகு பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு முகூர்த்தகாலை சுமந்தவாறு கோவிலை சுற்றி வந்தனர். பிறகு கோவில் முன்பு முகூர்த்தகால் ஊன்றப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் இராஜேந்திரம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏரானமானோர் கலந்துகொண்டு சாமி வழிபாடு செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி