கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் 55. வழக்கறிஞர் படிப்பு முடித்த இவர் நெய்தலூர்காலணியில் இலை வியாபாரம் செய்து வந்துள்ளார். அதேபோல நெய்தலூர்காலனியை சேர்ந்த மகேந்திரன் 35 என்பவரும் இலை வியாபாரம் செய்து வருகிறார். கணேசனுக்கும், மகேந்திரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் தொழில் பிரச்சனையில் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை 8. 30 மணி அளவில் நெய்தலூர் கடைவீதியில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. மகேந்திரன் கையால் தாக்கியதில் கீழே விழுந்த கணேசன் சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து நங்கவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கரூர் குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பி கல்யாணசுந்தரம் தலைமையில் குளித்தலை, மாயனூர் காவல் ஆய்வாளர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.