பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய குளித்தலை டிஎஸ்பி

66பார்த்தது
2025 ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி கரூர் மாவட்டம் குளித்தலை காவல்துறை சார்பில் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு நள்ளிரவு 12. 05 மணி அளவில் ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி அங்கிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களை அழைத்து அவர்களை கேக் வெட்ட வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் பொது மக்களுக்கு கேக்குகள் வழங்கிய டிஎஸ்பி செந்தில்குமார் அனைவரும் சகோதரத்துடன் எந்த ஒரு வேறுபாடு இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி