தஞ்சை மாவட்டத்தில் கூலி உயர்வு உரிமைகளுக்காக போராடிய 44 விவசாய கூலி தொழிலாளர்கள் உயிரோடு தீயிட்டு கொளுத்தப்பட்டனர். நினைவு தினத்தை போற்றும் வகையில் இன்று கீழவெண்மணி தியாகிகள் 56 ஆவது ஆண்டு நினைவு தின வீரவணக்க நாள் முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் தலைமையில் நினைவிடம் படத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவி வீர வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜு ஒன்றிய குழு உறுப்பினர் சிவா மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ், வழக்கறிஞர் சரவணன், ராஜேந்திரன், பாலு, வடிவேல், ஜெகநாதன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகிகள் கண்ணதாசன், தர்மராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலர்களை தூவி வீரவணக்கம் செலுத்தினர்.