கரூர் மாவட்டத்தில் பிரபாகரன் என்பவர் நேற்று (டிச. 24) ஒரு ஸ்வீட் கடையில் பிளம் கேக் வாங்கி தனது குழந்தைக்கு கொடுத்தார். அதை பிரித்த போது கேக் பூசனம் பிடித்து கெட்டுப்போய் இருந்தது. அதை மீண்டும் கடைக்கு எடுத்துச் சென்று கேட்டபோது, மாற்றிக் கொடுப்பதாக கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவுள்ளதாக பிரபாகரன் கூறினார்.