கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் தெருவில் அம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப், செந்தில் நினைவு கபடி குழு, அமெச்சூர் கபடி கழகம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் ஈரோடு, திருச்சி, கரூர், திண்டுக்கல், தாராபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கபடி குழு அணியினர் பங்கேற்று விளையாடினர்.
ஆட்ட நேர முடிவில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த எழுநூற்றுமங்கலம் கில்லர்கிங்ஸ் அணி முதல் பரிசாக ரூ. 10000 மற்றும் 6 அடி சுழற்கோப்பை பெற்றது. இரண்டாம் பரிசாக குளித்தலை நண்பா ஸ்போர்ட்ஸ் அணி ரூ. 7000 மற்றும் 5 அடி சுழற்கோப்பை பெற்றது. மூன்றாம் பரிசாக வல்லம் விஜயா ஸ்போர்ட்ஸ் அணி ரூ. 5000 மற்றும் 4 அடி சுழற்கோப்பை பெற்றது. நான்காம் பரிசாக குட்டப்பட்டி குட்லக் அணி ரூ. 5000 மற்றும் 3 அடி சுழற்கோப்பை தட்டி சென்றது.
4 பரிசுகளையும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கபடி அணியினர் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.