கரூர் மாவட்டம் குளித்தலை வைகநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற மோகனசுந்தரம் (41). இவர் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு ஏலம் எடுத்து பூஜை பொருட்கள் விற்பனை கடை நடத்தியுள்ளார். இந்த ஆண்டு ஏலம் எடுக்காததால் கோவில் அருகே மேற்கு பகுதியில் வாடகை கட்டிடத்தில் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் கடம்பர் கோவில் தெருவில் வசிக்கும் லட்சுமி என்பவர் இந்த வருடம் ஏலம் எடுத்து தற்போது கோவில் உள்ளே பூஜை பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றார்.
இந்த நிலையில் தனக்கு போட்டியாக கடை நடத்துவதாக சரவணன் வைத்திருக்கும் பூஜை கடை நோக்கி லட்சுமி கையில் சிமெண்ட் கல்லை எடுத்துக்கொண்டு தனது மகளுடன் கடைக்குள் புகுந்து சரவணன் கடையில் இருந்த கண்ணாடி ஷோகேசுகள், பிரிட்ஜ் மற்றும் பூஜை பொருட்களை அடித்து உடைத்தும் அங்கிருந்த பொருட்களையும் எடுத்து வீசி சேதப்படுத்தி கடை வெளியே நின்று நான் 16 லட்சத்தில் ஏலம் எடுத்து ஆளுங்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளேன். என தாய் மகள் இருவரும் தகாத வார்த்தையால் திட்டி அங்கிருந்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த நிகழ்வை சரவணன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து குளித்தலை காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். போலீசார் தற்போது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்