கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுகி (30). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது அங்கு வந்த இவரது கணவர் சிலம்பரசு மது போதையில் வாசுகியிடம் பிரச்சனை செய்துள்ளார். பிறகு தகாத வார்த்தையால் திட்டி வீட்டில் இருந்த அறிவாளை எடுத்து கழுத்தை அறுத்துள்ளார். காயப்பட்ட வாசுகி தனியார் வாகன மூலம் பெட்டவாய்த்தலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வாசுகி அளித்த புகாரின் பேரில் சிலம்பரசன் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து கைது செய்தனர்.