டிவிஎஸ் எக்ஸ்எல் மீது கார் மோதியதில் கணவன், மனைவி படுகாயம்

67பார்த்தது
டிவிஎஸ் எக்ஸ்எல் மீது கார் மோதியதில் கணவன், மனைவி படுகாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தென்கடை குறிச்சியை சேர்ந்தவர் செல்வி (46). இவர் நேற்று முன்தினம் தனது கணவர் நீலகண்டனுடன் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் பாறைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருச்சி உறையூரைச் சேர்ந்த ரங்கராஜ் ஓட்டி வந்த கார் மோதியதில் செல்வி நீலகண்டன் படுகாயம் அடைந்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.

டேக்ஸ் :