கரூர்: டாட்டா ஏசி வாகனம் மோதி, கணவன் மனைவி படுகாயம்

57பார்த்தது
கரூர்: டாட்டா ஏசி வாகனம் மோதி, கணவன் மனைவி படுகாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் ஊராட்சி பரளி அடுத்த கல்லுபட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (44). இவர் நேற்று தனது கணவர் முருகானந்தம் ராயல் புல்லட்டில் பின்னால் அமர்ந்துகொண்டு மங்கம்மாள் சாலையில் சென்றுகொண்டிருந்தார். 

அப்போது கூடலூர் அருகே பின்னால் பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டிவந்த டாடா ஏசி வாகனம் மோதியதில் கணவன், மனைவி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய பாலகிருஷ்ணன் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி