கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பேருந்து நிறுத்தம் அருகே காவிய தலைவர் கேப்டன் அறக்கட்டளை சார்பில் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜை விழா முன்னிட்டு விஜயகாந்த் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து தேங்காய், பழம், இட்லி, பொங்கல், இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவு வகைகளை வாழை இலையில் படையல் இட்டு சூடம் ஏற்றி மண்டியிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வில் குளித்தலை நகர நிர்வாகிகள் விஜயகுமார், வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கேப்டன் திருவுருவபடத்திற்கு மலர்களை தூவி மண்டியிட்டு கும்பிட்டு தரிசனம் செய்தனர்.