தோகைமலை சேர்மன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

65பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பகுதியில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிக்குமார் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைத்ததை கொண்டாடும் வகையில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தோகைமலை பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசுகள் வெடித்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணித்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள், தோகைமலை ஒன்றிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி