கட்டாணிமேடு ஸ்டாப்பில் பேருந்தில் ஏறிய முதியவர் படுகாயம்

1பார்த்தது
கட்டாணிமேடு ஸ்டாப்பில் பேருந்தில் ஏறிய முதியவர் படுகாயம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் ஊராட்சி சேப்பலாபட்டி மேலமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி 75. இவர் நேற்று கட்டாணி மேடு பஸ் ஸ்டாப்பில் தனியார் பேருந்தில் ஏற முயன்ற போது பேருந்தை திடீரென அஜாக்கிரதையாக இயக்கியதில் ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் பேரன் பிரவீன் குமார் புகாரில் தனியார் பேருந்து ஓட்டுனர் மணிகண்டன் மற்றும் நடத்துனரான மற்றொரு மணிகண்டன் ஆகிய இரண்டு பேர் மீது நங்கவரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி