தேவேந்திரகுல வேளாளர் கல்வி குடும்பத்தின் முப்பெரும் விழா

51பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூர் தேவேந்திரகுல வேளாளர் கல்வி குடும்பம் சார்பில் 19 ஆம் ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, முதல் பட்டதாரிகளின் பெற்றோர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளருக்கு பாராட்டுதல் ஊக்கப்படுத்துதல் மற்றும் சிறப்பு செய்தல் முப்பெரும்விழா நேற்று இரவு இந்திரன் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மேகலா தனசேகரன் தலைமை வைத்தார். வழக்கறிஞர்கள் குமார், பாலகுமார், ரதி, போஸ்ட்மேன் கருமலை ஆகியோர் முன்னிலை வைத்தனர். மருதூர் பேரூராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சுப்பிரமணியன், தனி வட்டாட்சியர் தீபத் திலகை ஜெயவேல் காந்தன் துவக்கி வைத்தனர். ஆசிரியர் ரவிச்சந்திரன், நகர திமுக இளைஞரணி செயலாளர் வினோத்குமார் தொகுத்து வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக துணை வட்டாட்சியர் ஜெயவேல் காந்தன், தேவேந்திர குல வேளாளர் மத்திய மாநில அரசு ஊழியர் சங்கம் ரவிச்சந்திரன் வீர தேவேந்திரகுல வேளாளர் மாநில செயலாளர் கட்டளை விஜி, உடற்கல்வி ஆசிரியர் கட்டளை சுப்பிரமணி, ரூசோ, மா. பொருளாளர் இளங்கோ, மா. து. தலைவர் பாபு, மா. நிர்வாக குழு கட்டளை கிருஷ்ணமூர்த்தி, வ. த. கட்சி மாநில மாணவரணி செயலாளர் துரைராஜ், தே. ம. இ ஒன்றிய செயலாளர் ஹன்ஸா பிரதீப் , பட்டதாரிகள் உதயகுமார், ரங்கநாதன், பிரகாஷ், நகுலன் தீபன் முருகானந்தம், சக்திவேல் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி