இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி குளித்தலை தாலுகா செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மின் கட்டண உயர்வை திரும்ப பெறவும், மின்கட்டணத்தை மாதந்தோறும் கணக்கிட்டு வசூல் செய்யும் நடவடிக்கையை உடனடியாக தொடங்கிடவும் தமிழக அரசை வலியுறுத்தியும், மாநில உரிமைகளை பறிக்கும் உதைமின் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். துணை செயலாளர் அர்ஜுன் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வம், முருகேசன், மகாலிங்கம், மருதை, கணேசன் பிள்ளை, மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி