கும்பாபிஷேக விழாவை ஒட்டி வண்ண விளக்குகளில் அலங்காரம்

76பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோவிலானது காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி அமையப்பெற்ற சிவஸ்தலமாகும். பிரசித்துப் பெற்ற இந்த திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.

அதையொட்டி கோவில் கோபுரம் முதல் தேரோடும் வீதிகள் வரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. கோவில் வளாகம் அருகே யாகசாலையில் சிவாச்சாரியார்கள் பல்வேறு யாக பூஜைகளை செய்து வருகின்றனர்.

14 வருடங்களுக்குப் பிறகு கடம்பவனேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற இருப்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி