கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்னப்பனையூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரும்பாயி இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் 17 வயதுடைய மகள் கடந்த 3 ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் சுரும்பாயி புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.