நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழு ஆய்வு

79பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர். டி மலை ஜல்லிக்கட்டு விழா நடத்த உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தன்னிச்சையான தணிக்கை குழு தலைவர் தர்மராஜ் தலைமையில் உறுப்பினர்கள் சொக்கலிங்கம், கிராமியம் நாராயணன், செந்தில்குமார், கருப்பசாமி, முருகானந்தம் ஆகியோர் போட்டி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 50 சதுர அடியில் 6 இஞ்ச் அளவிற்கு தேங்காய் நார்கள் கொட்டப்பட வேண்டும். வாடி வாசலில் இருந்து வெளியே ஓடும் மாடுகள் கடைசி எல்லையில் செல்லும் வரை பாதுகாப்பாக முறையில் செல்ல பாதை அமைக்க வேண்டும் அவ்விடத்தில் கால்நடை மருத்துவர் நியமிக்க வேண்டும், வாடிவாசல் நோக்கி வரும் மாடுகளின் கழுத்தில் எந்த ஒரு மாலையும் அணிவிக்க கூடாது, காளைகளுக்கு துன்புறுத்தும் வகையில் எந்த செயலும் செய்யக்கூடாது, கால்நடை மருத்துவ வசதி அங்கு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி