கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகரத்தினம் (77) இவர் மாநில மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி லீலாவதி (78) என்பவரின் பெயரில் 3 சென்ட் உள்ள வீட்டில் கடந்த 45 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
வயது மூப்பு காரணமாக லீலாவதினுடைய பட்டாவை அவரது மகன் விக்னேஷ் க்கு சொத்துக்களை பெயர் எழுதி வைக்க வேண்டும் என முயற்சி செய்து சார்பதிவாளர் அலுவலகம் சென்ற போது அவருடைய சர்வே எண் 2022ல் இருந்து முகமது பாரி மற்றும் குடும்பத்தினர்கள் என்ற அடையாளம் தெரியாத நபர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டிருந்தது.
இதனை அறிந்த லீலாவதி மற்றும் அவரது கணவர் பட்டா பெயர் மாற்றம் தவறுதலாக கணினியில் பதவி ஏற்றம் செய்யப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், குளித்தலை வட்டாட்சியர் ஆகியோருக்கு 3 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை. வேண்டுமென்றே காலதாமதம் செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி பல முறை மனு கொடுத்ததும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு கணவருடன் அமர்ந்து வேதனை தெரிவித்தார்.