கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் 30 பணியாளர்கள் பணியில் இருந்து வருகிறார்கள்.
நேற்று கோவில் வளாகத்தில் கோவில் தொழிலாளர்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் துரை தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 30 தொழிலாளர்கள் பணியில் இருப்பதாகவும், 13 தொழிலாளர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு பணியாளராக அறிவிக்கப்பட்டது.
இவர்களுக்கு அரசு சம்பளமாக ரூபாய் 18, 000 உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர் நல வைப்பு நிதி பிடித்தும் போக ரூபாய் 6 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியராக அறிவிக்கப்பட்டவர்களுக்கும், தற்காலிகமாக பணியில் இருப்பவர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் அரசு ஊழியராக அறிவிக்கப்பட்ட 13 தொழிலாளர்களுக்கு அரசு சம்பளமாக வழங்கவும், மற்ற 17 தொழிலாளர்களை அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். ஏற்கனவே தமிழக முதல்வர், இந்து சமய அறநிலை துறை அமைச்சர், இந்து சமய துறை ஆணையர், திருப்பூர் மற்றும் திருச்சி மண்டல இணை ஆணையர் உள்ளிட்டோருக்கு கடந்த 13 முறையாக கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்துள்ளனர்.
மேலும் கோரிக்கை மனுவினை கோவில் செயல் அலுவலர் தங்கராஜிடம் தொழிலாளர்கள் வழங்கினார்கள்.