கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்கள் பாதுகாப்பு, சிசிடிவி சைபர் குற்றம் மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அனைத்து மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் கலைவாணி பெண்கள் பாதுகாப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு ஏதேனும் வன்கொடுமைகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டால் 181 என்ற எண்ணிற்கு அழைத்து தங்களது புகார் இணைக்கலாம் என்றும்,
குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் வியாபார இடங்களில் மற்றும் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்தும், இதன்மூலம் கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணுவதுடன் அவர்களை பிடிப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும், இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் குறையும் என்றும் கூறினார்.