கரூர்: குச்சியால் அடித்த 2 பேர் மீது வழக்கு பதிவு

70பார்த்தது
கரூர்: குச்சியால் அடித்த 2 பேர் மீது வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெரியபாலம் பிள்ளை தோப்பு தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (56). இவருக்கும் அமுதவேல் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. 

இந்தநிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த கோகுலகண்ணனை, அமுதவேல், சதீஷ்குமார் ஆகிய இருவரும் குச்சியால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் 2 பேர் மீது நேற்று (ஜன.3) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி