கரூர் மாவட்டம், குளித்தலை சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் குளித்தலை சுங்ககேட் தந்தை பெரியார் காவிரி பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, தார்ப்பாய் கட்டிய நிலையில் வேகமாக சென்ற டாரஸ் லாரியை மடக்கி சோதனை செய்த போது, லாரியில் 5 யூனிட்டுக்கு மேல் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்று மணல் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்த சப் இன்ஸ்பெக்டர் குளித்தலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினார்.
பின்னர் லாரி எண்ணை வைத்து லாரி உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து டாரஸ் லாரி உரிமையாளர் குளித்தலை அண்ணாநகர், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ராஜசுதர்சன் என்கிற சுள்ளான் சுரேஷ் (41) மற்றும் தப்பி ஓடி தலைமறைவான லாரி டிரைவர் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.