கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ குறப்பாளையம் பிரிவு ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமாக ஆர்15 யமஹா மற்றும் என்.எஸ்.200 பஜாஜ் பல்சர் வாகனத்தில் பதிவு எண் இல்லாமலும் ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் ஐந்து பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர். அதனையடுத்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் குமார் 23, சென்னை வடபழனியைச் சேர்ந்த தமீம் அன்சாரி (23) இவரது மனைவி பூமணி (20) மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திக் 19, சரண்யா 19 ஆகிய 5 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.