கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆர்த்தாம்பட்டியைச் சேர்ந்தவர் மருதாயி (57). இவருக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டுவதற்கு விஏவிடம் முறையாக அடங்கல் பெற்று மரங்களை வெட்ட முற்பட்டுள்ளார். அப்போது உறவினர்கள் பழனிச்சாமி, பாக்கியம், அன்னலட்சுமி ஆகிய 3 பேரும் மருதாயியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். குளித்தலை நீதிமன்ற உத்தரவின் படி தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு.