கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை. புதூர் இரட்டை வாய்க்கால் கரையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்று குளித்தலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த பிரகாஷ் (21), மணிகண்டன் (24), பிரகாஷ் (29) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று (செப்.,24) கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 2 சீட்டு கட்டுகள், ரூ. 400 பறிமுதல் செய்துள்ளனர்.