கரூர்: விசிக சார்பில் முகாம் செயற்குழு கூட்டம்

68பார்த்தது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கரூர் கிழக்கு மாவட்டம், தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னையம்பாளையம் ஊராட்சி காக்காயம்பட்டியில் முகாம் செயற்குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. 

முகாம் பொறுப்பாளர் பழனிவேல் தமிழரசன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றலரசு மற்றும் தோகைமலை ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் அங்கீகாரம் வழங்கியதை வரவேற்கும் விதமாகவும், மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் மகளிர் மாநாட்டுக்கு அணி திரட்டுவது சம்பந்தமாகவும் மேலும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் கிருஷ்ணசாமி, லட்சுமணன், பாலகுமார், ராமன் மகாதேவன், பிரபு குமார், மலைவேல் சரத்குமார், சங்கபிள்ளை, சசிகுமார் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், ஊர் முக்கியஸ்தர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி