ஞாயிறு தோறும் பள்ளி சிறுவர்-சிறுமியருக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் குளித்தலை தெப்பக்குளத் தெருவில் தமிழக வெற்றிக்கழகம் குளித்தலை நகரம் சார்பில் விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தவெக குளித்தலை நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரொட்டி, பால், முட்டை வழங்கினர்.