கரூர்: நிறுத்தி வைத்திருந்த லாரி மீது பைக் மோதி விபத்து

85பார்த்தது
கரூர்: நிறுத்தி வைத்திருந்த லாரி மீது பைக் மோதி விபத்து
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கொசூர் அடுத்த சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் கடந்த 14 ஆம் தேதி தனது பைக்கில் பறந்தாடி பிரிவு அருகே இரவு 10 மணி அளவில் சென்றுள்ளார். அப்போது இருட்டு பகுதியில் எந்த வித சிக்னலும் தடுப்பும் இல்லாமல் கவனக்குறைவாக நிறுத்தி வைத்திருந்த லாரியின் பின்புறம் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதுகுறித்து மாணிக்கம் மனைவி ராசம்மாள் புகாரின் பேரில் டாரஸ் லாரி ஓட்டுநர் பிச்சை முத்து மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி