கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை, குளித்தலை ஒன்றியம், நங்கவரம் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.
ஆர். டி மலை மேல்நிலைப் பள்ளியில் ரூ. 94. 24 லட்சம் மதிப்பில் புதிய 4 வகுப்பறை கட்டிடங்கள், நச்சலூர் உயர்நிலைப் பள்ளியில் ரூ. 78 லட்சம் மதிப்பில் 4 புதிய வகுப்பறை கட்டிடங்கள், முதலைப்பட்டி, நெய்தலூர், நல்லூர், இரணியமங்கலம், திம்மம்பட்டி ஊராட்சி பகுதிகளில் தார் சாலை மேம்படுத்துதல், நங்கவரம் பேரூராட்சியில் டூவீலர் பார்க்கிங் உள்ளிட்ட சுமார் 4. 97 கோடி மதிப்புலான நலத்திட்ட பணிகளுக்கு எம்எல்ஏ மாணிக்கம் இன்று பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் சேப்ளாப்பட்டியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பிரசவ அறை கட்டிடத்திணையும், ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
இதில் குளித்தலை, தோகைமலை ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், அண்ணாதுரை, நங்கவரம் பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், நங்கவரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் அன்பழகன், பேரூராட்சி கவுன்சிலர் , முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சின்னையன், மாவட்ட பிரதிநிதி ஆர். டி மலை சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.