கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தும், முடிவுற்ற பல்வேறு நல திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் திறந்து வைத்தார்.
தோகைமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார ரூ. 29. 45 லட்சம் மதிப்பு பிரசவம் பின் கவனிப்பு அறை கட்டிடத்தினையும், பாதிரிப்பட்டியில் கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலையம், கீழவெளியூரில் கட்டப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையம், கல்லடை ஊராட்சி மேலவெளியூர் மற்றும் தோகைமலை ஊராட்சி திருமாணிக்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கட்டப்பட்ட தலா 2 வகுப்பறை கட்டிடம், கழுகூர் அ. உடையாபட்டியில்கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தினையும், கூடலூர் ஊராட்சி ஜி. உடையாபட்டியில் கட்டப்பட்ட கூடுதல் புதிய 4 வகுப்பறை கட்டிடத்தினையும் எம்எல்ஏ மாணிக்கம் திறந்து வைத்தார்.
மேலும் பில்லூரில் புதிய நிழற்குடை கட்டும் பணிக்கும், நாகனூரில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கும், கூடலூர் ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணிக்கும், கீழ ஊத்தம்பட்டியில் தார்ச்சாலை வலுப்படுத்தும் பணிகளுக்கும் எம்எல்ஏ பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ ராமர், முன்னாள் யூனியன் சேர்மன் சுகந்தி சசிகுமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்