கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாலாந்தூர் கிராமத்தில் பல மாதங்களாக தெருக்களில் உள்ள குப்பைகளை அள்ளப்படாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. பலமுறை இராஜேந்திரம் ஊராட்சிக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.