விழிப்புணர்வு மேளா நிகழ்ச்சி

80பார்த்தது
விழிப்புணர்வு மேளா நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் தோகைமலையில் மகளிர்திட்டம் சார்பாக (அஸ்பிரேஷனல் பிளாக் திட்டம்) முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் 6ஆம் கட்ட பணிகளின் பெண்களின் வாழ்வாதார செயல்பாடுகள் மற்றும் முன்னோடி வங்கி செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு மேளா நிகழ்ச்சி தொடங்கியது. ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தோகைமலை ஒன்றியக் குழு தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த், தோகைமலை ஒன்றிய ஆனையர்கள் ராஜேந்திரன், பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மகளிர் திட்டம் தோகைமலை வட்டார இயக்கம் சார்பாக அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்த கைத்தறி சேலைகள், சிறுதானிய திண்பண்டங்கள், இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள காய்கறிகள், பைகள், பெண்கள் பயன்படுத்தும் கேன் பேக்குகள், வீட்டு உபயோகப் பொருட்கள், சத்துமாவு, துவரை மற்றும் உளுந்து, மலர்கள், மலைத்தேன், எண்ணெய் வகைகள், மண்பாண்டங்கள், பொம்மைகள் உள்பட பல்வேறு பொருட்களின் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த காட்சிகளை பார்வையிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மகளிர்திட்டம் சார்பாக தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தோகைமலை வட்டாரத்தில் இருந்து மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி