குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

64பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் சகுந்தலா முன்னிலை வகித்தார். குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஶ்ரீ, கரூர் தடகள செயலாளர் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பிறகு மாணவிகளின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

இதில் பரதநாட்டியம் நிகழ்ச்சியில் மாணவிகள் அசத்தலாக நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி