கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் கோவிலில் அசைவ உணவு அருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையை பாதுகாப்போம் இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமையில் அறப்போராட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து முன்னணி குளித்தலை நகர, ஒன்றிய மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.