கடைவீதியில் லாட்டரி விற்ற நபர் கைது

80பார்த்தது
கடைவீதியில் லாட்டரி விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் தோகைமலை நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் கணேசன் (50). இவர் தோகைமலை கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் லாட்டரி விற்ற கணேசன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 7 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 70 பறிமுதல் செய்தனர்.