அய்யர்மலையில் புதிய மின்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு

61பார்த்தது
கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அய்யர்மலை ரோப் காருக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட புதிய மின் கம்பம் சாய்ந்து விழுந்தது.

தற்போது ரோப்கார் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரோப்கார் செல்லும் இடத்திற்கு செல்வதற்கு தார் சாலை அமைக்கப்பட்டு மின்விளக்கு கம்பங்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மின்விளக்கு கம்பங்கள் 1 அடி ஆழத்திற்கு மட்டும் கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளதால் கம்பங்கள் நேற்று பெய்த லேசான மழைக்கு சாய்ந்ததாகவும், மழை காலங்களில் இதைவிட அதி வேகத்தில் காற்று வீசும் போது அமைக்கப்பட்ட புதிய மின்விளக்கு கம்பங்களும் வலுவிழந்து கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அமைக்கப்பட்ட மின்கம்பங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டுமென பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி