சரக்கு வாகனத்தின்மீது அரசுபேருந்து மோதி விபத்து; 8 பேர் காயம்

1921பார்த்தது
சரக்கு வாகனத்தின்மீது அரசுபேருந்து மோதி விபத்து; 8 பேர் காயம்
திருப்பூர் மாவட்டம், ஆண்டி மடக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் வயது 30. இவர் அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனத்தின் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டம், மாங்கொட்டை தெற்குதெருவை சேர்ந்த பழனிகுமார் வயது 49, பாலசுப்பிரமணி வயது 42, இயன்காடு பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது 42, பாலையா வயது 60, முருகன் வயது 60, ஆகியோர் இந்த சரக்கு வாகனத்தில் பயணித்தனர்.

இந்த வாகனம் கரூர்- கோவை சாலையில் சென்றது. இரவு 11 மணி அளவில், பவித்திரமேடு விஏஓ அலுவலகம் அருகே சென்றபோது எதிர் திசையில், திருப்பூர் மாவட்டம், சாணார்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் வயது 44 ஓட்டி வந்த அரசு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பணித்த அனைத்து பேரும், அரசு பேருந்தில் பயணித்த, கரூர், பசுபதிபாளையம், திண்ணப்பாநகரை சேர்ந்த சிங்காரவேல் மனைவி லட்சுமி வயது 57 உள்பட
பலத்த காயமடைந்தனர்.

அனைவரையும் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து பழனிகுமார் அளித்த புகாரில், சம்பவ இடத்தில் விசாரண செய்த க. பரமத்தி8 காவல்துறையினர், அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி