திருவிழாவில் கத்திக்குத்து இரண்டு பேர் மீது வழக்கு

67பார்த்தது
திருவிழாவில் கத்திக்குத்து இரண்டு பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மருதூர் மேல தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்தன் மகன் ராம்குமார் வயது 28. இவர் தனது ஊர் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தனது பெரியம்மா மகன் ரமேஷ் என்பவர் அக்னிசட்டி எடுத்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் குமார் நன்னுக்குமார் ஆகிய இருவரும் நடனமாடிக் கொண்டு கோயிலுக்கு செல்வதற்கு இடையூறாக இருந்துள்ளனர். இதுகுறித்து ராம்குமார், அவரது தம்பி ரஞ்சித் ஆகிய இருவரும் அறிவுரை கூறியும் ஏற்காமல் தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். மேலும் ரஞ்சித்தை கையால் அடித்தும் கத்தியால் வயிற்றின் இடது பக்கத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராம்குமார் அளித்த புகாரின் பேரில் அனீஸ் குமார், நன்னுக்குமார் ஆகிய 2 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :