கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளப்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டைகளை பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த சுப்பு ரெட்டியார் மகன் சண்முகராஜ் (45) என்ற நபர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 5 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.