கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா சின்ன தேவன் பட்டியை சேர்ந்தவர் மருதை (60). இவர் கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கொட்டாம்பட்டியில் உள்ள சக்தி பெட்டிக்கடை அருகே நேற்று முன்தினம் (செப்.24) வந்துள்ளார். அப்போது திடீரென ஓடி வந்த லோகநாதன் என்பவர் மருதை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று(செப்.25) வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.