7 ஏக்கர் அல்வா பூசணி நீரில் மூழ்கி நாசம்

61பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்சிங். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டுள்ளார்.

குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.இதனால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதில் மோகன்சிங் அல்வா பூசணிக்காய் பயிரிட்டுள்ள 7 ஏக்கர் நிலத்தில் மழைநீர் தேங்கியதால் அல்வா பூசணிக்காய் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியது.

ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை செலவு செய்து நிலையில் 7 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட அல்வா பூசணிக்காய் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியதால் தனக்கு 7 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் வடிகால் நீர் வடிவதற்கு ஏதுவான கால்வாய்கள் ஆக்கிரமிப்பினால் தண்ணீர் செல்ல வழியின்றி உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி