கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நேற்று அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனஞ்சனூர் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் பணம் வைத்து சூதாடிய திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்த சண்முகம் மகன் பாலாஜி (26), ஜெயில் கார்னர் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் மகன் முத்துக்குமார் (33), பெருகமணியை சேர்ந்த மணி மகன் ராஜசேகர் (35) ஆகிய மூன்று பேரை பிடித்த போலீசார் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரொக்கப்பணம் ரூ. 15, 000 பறிமுதல் செய்துள்ளனர்.