கரூர் மாவட்டம் தோகைமலை அருகே முனையம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட சக்தி மகாலிங்கம், மகாலிங்கம், வெங்கட்ராமன், நல்லகுமார், சின்ராசு, வடிவேல், சசிகுமார், செல்வம் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.
மேலும் ஒரு சீட்டுக் கட்டு, ரூ. 16980 பறிமுதல் செய்தனர். அதேபோல் புதுவாடியில் உள்ள இடிந்துபோன ஆரம்ப பள்ளிக் கட்டிடம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, மாணிக்கம் சுந்தரம், கருப்பசாமி, சுப்பிரமணியன், கருப்பண்ணன், தாமரைச் செல்வன், அழகுராஜ் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் ஒரு சீட்டுக் கட்டு, ரூ. 10120 பறிமுதல் செய்தனர்.